உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடியும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்

இடியும் நிலையில் கூட்டுறவு சங்க கட்டடம்

சோழவந்தான்: சோழவந்தான் பஸ்ஸ்டாண்ட் மந்தைக்களம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பயனாளிகள் வந்து செல்கின்றனர். சங்க நுழைவாயிலில் வேளாண் உரங்கள் வைக்கும் கோடவுன் உள்ளது. இதன் கான்கிரீட் சிலாப்புகள், படிக்கட்டுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் உரங்களை இறக்கும் தொழிலாளர்கள் மற்றும் எடுத்துச் செல்லும் விவசாயிகள் மீது பராமரிப்பற்ற கட்டடம் விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த கட்டடங்களை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை