மாணவிக்கு உதவிய கலெக்டர், எம்.எல்.ஏ.,
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ.,முன்னிலை வகித்தார்.கலெக்டரை சந்தித்த 17 வயது ஆனந்தி, 'சிறுவயதில் பெற்றோரை இழந்து விட்டேன். உறவினர்கள் பராமரிப்பில் 10ம் வகுப்பில் 411, பிளஸ் 2வில் 477 மதிப்பெண்கள் பெற்றேன். தற்போது மீனாட்சி அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., கெமிஸ்ட்ரி சேர்ந்துள்ளேன். எனக்கு உரிய வசதிகள் இல்லாததால் விடுதி மற்றும் படிப்பிற்கு உதவ வேண்டும்' என்றார்.உடனடியாக அலைபேசியில் கல்லுாரி நிர்வாகத்திடம் கலெக்டர் பேசி உதவிகிடைக்க ஏற்பாடு செய்தார். புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அரசு உதவிகள் கிடைக்க எம்.எல்.ஏ., ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.