மேலும் செய்திகள்
காமராஜ் பல்கலை மண்டல விளையாட்டு போட்டிகள்
04-Aug-2025
சோழவந்தான் : 'கடந்த 20 ஆண்டுகளில் அதிகளவிலான தகவல்களே ஏ.ஐ., தேவையை ஏற்படுத்தின' என்று கருத்தரங்கில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார். திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி, களஞ்சியம் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் குறித்து இரண்டு நாள் மாநில கருத்தரங்கு நேற்று தொடங்கியது. 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' துறைத் தலைவர் பாலாஜி வரவேற்றார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பங்கேற்றார். அவர் பேசியதாவது: ஏ.ஐ., தொழில்நுட்பம் புதுமையானது அல்ல. கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்திற்கும் முந்தையது. கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிக அளவிலான தகவல்கள் ஏ.ஐ., தேவையை ஏற்படுத்தியது. வெற்றிகரமான வாழ்க்கை என்பதை விட மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதே முக்கியம். நாம் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்பதிலேயே நமது மகிழ்ச்சி உள்ளது. மாணவர்கள் பட்டம் பெறுவதை காட்டிலும் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர்களாக இ.பி.ஜி. பவுண்டேஷன் நிர்வாகி பிந்து, ரங்கபாஷ்யம் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரஞ்சித் குமார் தொகுத்து வழங்கினார். 'நவி பிரமோஷன்ஸ்' சி.இ.ஓ நாகவிஷ்ணு நன்றி கூறினார்.
04-Aug-2025