பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் காயம்
உசிலம்பட்டி: செக்கானுாரணி தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் 45. செக்கானுாரணி டெப்போவில் கண்டக்டராக உள்ளார். நேற்று பணிக்குச் சென்றவர் தேனியிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கி கொண்டிருந்தார். பஸ் செல்லம்பட்டி அருகே முண்டுவேலன்பட்டி பாண்டி கோவில் வளைவில் சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.