| ADDED : டிச 28, 2025 06:05 AM
மதுரை: விரிவாக்கம் செய்யும் சாலைகளை் நடைமேடை, வடிகால் வசதியுடன் அமைக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன் மனு: மாநகராட்சியில் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து சாலைகளை விரிவாக்கம் செய்து, அதில் பாதசாரிகளுக்குப் பாதை அமைக்காமல் தார்சாலையாக அமைக்கின்றனர். இதனால் நடைமேடைக்கும் சேர்த்து பில் போட்டு லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர். மதுரை - உத்தங்குடி ரோடு முதல் உயர்நீதிமன்றம் வழியாக விவசாய கல்லுாரி வரை, மதுரை - திருநகர் ரோட்டில் பைகாரா முதல் தனக்கன்குளம் வரை, பெரியார் நிலையம் முதல் சேதுபதி பள்ளி வரை, பெரியார் ரயில்வே மேம்பாலம் முதல் பைபாஸ் ரோடு வரை, மதுரை ரயில்வே மேற்கு வாயில் முதல் அரசரடி வரை, காமராஜர் ரோட்டில் விளக்குத்துாண் முதல் தெப்பக்குளம் வரை, கே.புதுார் முதல் கடச்சனேந்தல் வரை, மதுரை விமான நிலைய சாலை வில்லாபுரம் முதல் பெருங்குடி வரை சாலைகள் நடுவே விளக்குகள் பொருத்தப்பட வில்லை. இந்த ரோடுகளை ஆய்வு செய்து, மழைநீர் இருபுறமும் வடியும் வகையில் கட்டமைப்புடன் இடத்தில் தார்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.