கூட்டுறவு சங்கத்தினர் விவசாயிகள் ஆலோசனை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்,விவசாயிகள்கலந்துரையாடல் கூட்டம் சங்க மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. அலுவலர்கள் மகேந்திரன், பவர்சிங், மாயாண்டி, உசிலை தாலுகா 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்றனர். நெல், பருத்தி, தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை அன்றைய சந்தை விலையில் கமிஷன் இடைத்தரகு இல்லாமல் சங்கம் மூலம் விற்பனை செய்கிறோம்.12 சதவீத வட்டியில் நகைக்கடன்கள், அனைத்து பயிர்களுக்கான அடமானக்கடன் 10 சத வட்டியில் வழங்குகிறோம். விளை பொருட்களை உலர்த்தி பாதுகாப்பாக சேமித்து வைக்க சேமிப்புக்கிடங்கு வசதி, சேமித்துள்ள விளைபொருட்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர். விபரங்களுக்கு பொதுமேலாளரை 97889 68779 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.