உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டுச்சாணம் மதிப்பு கூட்டல்

மாட்டுச்சாணம் மதிப்பு கூட்டல்

மதுரை: அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில், மாட்டுச்சாணத்தில் மதிப்பு கூட்டல் குறித்த ஒரு மாத இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் மாட்டுச் சாணத்தில் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப் படுத்துதல், அரசு மானியம் பெற வழிகாட்டப்படும். பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் செப்.15ல் நடக்க உள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். முன் பதிவு: 87547 53107.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ