உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் தினமும் இலவச பிரசாதம் அழகர்கோவிலில் 6 ஆயிரம் லட்டு வினியோகம்

குன்றத்து கோயிலில் தினமும் இலவச பிரசாதம் அழகர்கோவிலில் 6 ஆயிரம் லட்டு வினியோகம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு தினமும் இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.குன்றத்து கோயிலில் தளபதி எம்.எல்.ஏ., பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். ஹிந்து அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் சிவா முன்னிலை வகித்தனர். கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று பக்தர்களுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

அழகர்கோவில்

கள்ளழகர்கோயிலில் நேற்று முதல்பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம்துணை கமிஷனர் ராமசாமி முன்னிலையில் துவங்கப்பட்டது. இங்கு இயந்திரங்கள் மூலம் லட்டுஉள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. நேற்று விடுமுறைநாள் என்பதால்ஒரே நாளில் 30 கிராம் எடை கொண்ட 6 ஆயிரம் லட்டு விநியோகம்செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை