உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரான்ஸ் தொழிலதிபருக்கு மதுரையில் பல் சிகிச்சை

பிரான்ஸ் தொழிலதிபருக்கு மதுரையில் பல் சிகிச்சை

மதுரை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீபன் மதுரைக்கு சுற்றுலா வந்த நிலையில் மதுரை நளா பல் மருத்துவமனையில் நிரந்தர பற்கள் பொருத்திக் கொண்டார்.பல் சிகிச்சை குறித்து ஸ்டீபன் கூறியதாவது: மதுரையின் பழமை மாறாத பண்பும் உணவும் என்னை கவர்ந்தது. பற்களை சரிசெய்வதற்காக நளா பல் மருத்துவமனை சென்றேன். எக்ஸ்ரே, ஸ்கேன் உட்பட பற்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் இருந்ததால் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் வலியின்றி பல் சிகிச்சை செய்து கொண்டேன். நிரந்தர பற்கள் பொருத்தியதால் எனக்கு பிடித்த பரோட்டா, பிரியாணி, அசைவ உணவுகளை சுவைக்கிறேன். மதுரை பயணம் இனிதாக அமைந்தது என்றார்.சிகிச்சை அளித்த பல் சீரமைப்பு நிபுணர் டாக்டர் கண்ணபெருமான் கூறுகையில், ''ஸ்டீபனுக்கு முற்றிலும் டிஜிட்டல் முறையில் பற்கள் பொருத்தப்பட்டதால் இயற்கையான பற்களை போல அமைந்துவிட்டது. பிரான்ஸ் நாட்டில் இருந்து மதுரையில் சிகிச்சை பெற்றது பெருமை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ