பூக்குழி இறங்கிய பக்தர்கள்
மேலுார் : திருவாதவூர் திரவுபதையம்மன் பங்குனி திருவிழா மார்ச் 2 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை திருமறைநாதர் கோயிலில் இருந்து பூக்குழி இறங்குவதற்கான நெருப்பு வளர்க்கப்பட்டு திரவுபதையம்மன் கோயில் முன் உள்ள பூக்குழி திடலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பச்சை மரத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. அதைதொடர்ந்து சப்பரத்தில் அர்ஜூனன் மற்றும் திரவுபதையம்மன் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.