உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி: தண்ணீர் நிறுத்தம்

தினமலர் செய்தி: தண்ணீர் நிறுத்தம்

மேலுார் : தினமலர் செய்தி எதிரொலியால் பிளாட்டுகளில் தேங்கி குடியிருப்போரை பாதிப்புக்குள்ளாகியதுடன், வீணாகச் சென்ற தண்ணீர் நிறுத்தப்பட்டு தீர்வு கிடைத்தது. மேலுாரில் இருந்து வண்ணம் பாறைப்பட்டிக்கு 6 பி கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் மலம்பட்டியில் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் பிளாட்டுகளில் தேங்கி வீணானது. தேங்கி நிற்கும் தண்ணீரால் இப்பகுதியில் குடியிருப்போர் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கண்மாய்க்கு தண்ணீர் செல்லாமல் பாசனத்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜெயராமன் ஏற்பாட்டில் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டு, வீணான தண்ணீர் நிறுத்தப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ