உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் கலந்துரையாடல்

பள்ளியில் கலந்துரையாடல்

மதுரை: மதுரை புதுார் அல்அமீன் பள்ளியில் வாசகர் வட்டம் சார்பில் 'வாசகர்களுடன் படித்ததில் பிடித்தது - கலந்துரையாடல்' நிகழ்ச்சி நடந்தது. சண்முகவேலு தலைமை வகித்தார். கடந்த மாத செயல்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி அறிக்கையாக சமர்ப்பித்தார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி உட்பட பலர் பேசினர்.பேராசிரியர் அருணன் எழுதிய 'கொலைக்களங்களின் வாக்குமூலம்' என்ற நுால் பற்றி எழுத்தாளர் சோழ நாகராஜன் பேசினார். ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நுால் குறித்து பேராசிரியர் சபரா பீவி அல்அமீன் பேசினார். அண்ணாத்துரை எழுதிய நீதிதேவன் மயக்கம் பற்றி கவிஞர் சுந்தரபாண்டியன் விளக்கினார். சாகித்ய அகாடமி விருதாளர் அம்பை எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' நுால் குறித்து பிரியதர்ஷினி உரையாற்றினார்.ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய 'கவிதை உறவுக் களஞ்சியம்' நுால் குறித்து ஆசிரியை சிவசத்யா மதிப்புரை நிகழ்த்தினார்.தொழிற்பயிற்சி முதல்வர் கோவிந்தராஜன் நன்றி கூறினார். ஆசிரியர் சதாசிவம், வாசகர் ராமசாமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி