கலந்துரையாடல்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணிதத் துறை உயராய்வு மையம் சார்பில் 'திரைக்குப் பின்னால் கணிதம்' என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். மாணவி ஜீவிதா வரவேற்றார். மாணவி புவனேஸ்வரி அறிமுக உரையாற்றினார். செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரத்னகுமார் பேசினார். மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. மாணவி அகல்யா நன்றி கூறினர். உதவிப் பேராசிரியர் சுமதி ஒருங்கிணைத்தார்.