தி.மு.க., அழைப்பு
மதுரை : மதுரை தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி (வடக்கு), தளபதி (நகர்), மணிமாறன் (தெற்கு) தெரிவித்துள்ளதாவது:விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் காலை 10:30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி கொடியேந்தி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.