உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போராடுபவர்களுக்கு பதில் கூறாமல் மழுப்புகிறது தி.மு.க., அரசு

 போராடுபவர்களுக்கு பதில் கூறாமல் மழுப்புகிறது தி.மு.க., அரசு

அவனியாபுரம்: தமிழகத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்களுக்கு பதில் கூற முடியாமல் தி.மு.க., அரசு மழுப்புகிறது,'' என மதுரையில் த.மா.கா தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு எதிராக அனைத்து பக்கங்களிலும் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தி.மு.க., அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது. இருக்கின்ற இரண்டு மாதங்களிலே வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற முடியாது என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் தீப பிரச்னையில், அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை