உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமூகநீதியை பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை உண்ணாவிரதத்தில் உதயகுமார் காட்டம்

சமூகநீதியை பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை உண்ணாவிரதத்தில் உதயகுமார் காட்டம்

மதுரை: ''சமூகநீதி என்று பேசி சமூக நீதிக்காக எந்த துரும்பையும் தி.மு.க., செய்யவில்லை. மீண்டும் தமிழகம் சிறப்பாக வரவேண்டும் என்றால் பழனிசாமி முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசினார்.வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் நேற்றுமுன்தினம் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடந்தது. தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் செய்திருந்தார்.தலைமை வகித்து அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோத ஆட்சியை, நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பழனிசாமி போராடி வருகிறார். அவரது உத்தரவுபடி இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. 10 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்றனர். அதை வழங்க துப்பில்லை, ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்றனர். அதை நிரப்ப துப்பு இல்லை. வெள்ளை அறிக்கை கேட்டால் அதை கொடுக்க துப்பில்லாத திராணி அற்ற அரசாக உள்ளது.மக்களுக்கு பாதுகாப்பற்ற அரசாக தி.மு.க., உள்ளது. தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பி, பழனிசாமியை தேசிய கொடி ஏற்றும் வகையில் இந்த உண்ணாவிரதம் பிள்ளையார் சுழியாக உள்ளது. தி.முக.,வை எதிர்த்து எம்.ஜி.ஆர்., அக்.17ல் அ.தி.மு.க.,வை ஆரம்பித்து மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். அதே அக்டோபரில் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. ஜெ., வழியில் சமுதாயத்திற்கு பழனிசாமி ஆற்றிய திட்டங்களை இளைய சமுதாயம் மறக்க மாட்டார்கள்.தி.மு.க.,வில் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். உதயநிதியை துணை முதல்வராக்கிய தி.மு.க., சமூக நீதி பற்றி பேசலாமா. சமூகநீதி என்று பேசி சமூக நீதிக்காக எந்த துரும்பையும் தி.மு.க., செய்யவில்லை. மீண்டும் தமிழகம் சிறப்பாக வரவேண்டும் என்றால் பழனிசாமி முதல்வராக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். கோட்டைக்கு பழனிசாமி போக வேண்டும். வீட்டுக்கு ஸ்டாலின் போக வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை