உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழாய் உடைப்பால் 7 நாட்கள் குடிநீர் கட்

குழாய் உடைப்பால் 7 நாட்கள் குடிநீர் கட்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைப்பால் ஏழு நாட்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.ரோடு விரிவாக்க பணிகளின் போது திருப்பரங்குன்றம் தேவிநகர் பகுதியில் நிலையூர் கால்வாயிலுள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணானது. குழாயை சீரமைப்பதற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டது. புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளை மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் ராதா பார்வையிட்டனர்.மண்டல தலைவர் கூறுகையில், ''திருப்பரங்குன்றம் பகுதிக்கு இன்று முதல், மற்ற பகுதிகளுக்கு நாளை முதல் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை