உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொடுக்கல் வாங்கல் பிரச்னை டிரைவர் குத்தி கொலை

கொடுக்கல் வாங்கல் பிரச்னை டிரைவர் குத்தி கொலை

திருமங்கலம்: திருமங்கலம் மறவன்குளத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் பாண்டி 32. இவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 25, பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரிடம் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.3 லட்சம்கடன் வாங்கினார். அதில் ரூ.ஒரு லட்சத்தை திருப்பிக் கொடுத்த நிலையில் மீதி பணத்தை கொடுக்காமல் இருந்துஉள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்தது.நேற்றிரவு 8.45 மணிக்கு மறவன்குளம் பஸ் ஸ்டாப் அருகே இருவரும் சந்தித்த போது தகராறு ஏற்பட்டது. மணிகண்டன் கத்தியால் பாண்டியை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார். மணிகண்டனை கைது செய்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ