உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் புரட்சி உதயகுமார் கிண்டல்

தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் புரட்சி உதயகுமார் கிண்டல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. மண்டல செயலாளர் ராஜாங்கம், நகர் செயலாளர் பூமாராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், நகராட்சித் தலைவர் சகுந்தலா, ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் துரை தனராஜன் மற்றும் பல்வேறு நகர பணிமனைகளில் பணியாற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி பயில வசதியாக நோட்டு, புத்தகங்கள், மடிக்கணினி வழங்கி கல்வி புரட்சி நடந்தது. தற்போது தி.மு.க., ஆட்சியில் மாணவர்களின் பையில் போதைப் பொருட்கள் இருக்கும் அளவிற்கு போதைப் பொருள் புரட்சி நடக்கிறது. அந்த போதைப்பொருள் புரட்சியாளராக ஸ்டாலின் இருக்கிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்