உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை பொருட்கள் பறிமுதல்

போதை பொருட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை கோச்சடை முத்தையா கோயில் பஸ் ஸ்டாப் அருகே சந்தேக நபர்களிடம் மாடக்குளம் போலீசார் விசாரித்தனர். அப்போது மானாமதுரை  கேசவகுமார் 26, ராமநாதபுரம் மாவட்டம் முகிலன் 23, கோகுல கிருஷ்ணன் 23, மதன் 24, போதைக்கு பயன்படுத்தக்கூடிய ‛டாபென்டாடோல்’ மாத்திரைகள் அடங்கிய 83 அட்டைகளை வியாபாரம் செய்யும் நோக்கில் வைத்திருந்தனர். மாத்திரைகள், 3 அலைபேசிகளை கைப்பற்றிய போலீசார், 4 பேரையும் கைது செய்தனர்.      மதுரை ரயில் நிலையம் 2வது பிளாட்பாரத்தில் திலகர் திடல் போலீசார் சோதனையிட்டனர். பெங்களூரூ-–நாகர்கோவில் ரயிலிலிருந்து இறங்கிய மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ்குமார் 30, பயோதாஸ் 49, வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட  பான்மசலா, புகையிலை பாக்கெட்டுகள் என மொத்தம் 9 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றினர். 2 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி