உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிரம்ஸ் செட் தொழிலாளி கொலை

டிரம்ஸ் செட் தொழிலாளி கொலை

மதுரை: மதுரை பெருங்குடி அருகே டிரம்ஸ் செட் தொழிலாளியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருங்குடி வலையங் குளம் டிரம்ஸ் செட் தொழிலாளி அஜய்குமார் 26. அப்பகுதியில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 டூவீலர்களில் சென்ற 5 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து தகராறில் ஈடுபட்டது. அக்கும்பல் தாக்கியதில் அவர் சம்பவயிடத்திலேயே இறந்தார். பெருங்குடி போலீசார் சி.சி.டிவி., மூலம் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி