உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

மதுரை : மதுரை மாவட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், வாக்காளர் அட்டை பெறவும் அக்.29 முதல் நவ. 28 வரை வேலை நாட்களில் ஆர்.டி.ஓ., அலுவலகம், மாநகராட்சி உதவி கமிஷனர் அலுவலகம், தாலுகாக்களிலும் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். நவ.16, 17 மற்றும் நவ.23, 24 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இம்முகாம்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிகளிலேயே நடைபெறும். சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து சரிபார்க்கலாம்.election.tn.gov.in/ElectoralRolls.aspx இணையதளத்திலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம். மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 1165 ஓட்டுச்சாவடி மையங்களில் இப்பணிகள் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி