உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றம் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டை ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

குன்றம் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டை ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோயில் திருவிழா, முகூர்த்த நாட்களில் உள்ளூர் மக்கள், பக்தர்கள், திருமணத்திற்கு வருவோர் எளிதாக வந்து செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் நடந்தது.மண்டல தலைவர் சுவிதா, போலீஸ் உதவி கமிஷனர்கள் குருசாமி, ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பஞ்சவர்ணம், முருகானந்தம், கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனி, அ.தி.மு.க., நிர்வாகிகள் ரமேஷ், முருகன், தி.மு.க., நிர்வாகிகள் விமல், கிருஷ்ண பாண்டியன், ஆறுமுகம், சிறு வியாபாரிகள், திருமண மண்டப நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் பங்கேற்றோர் பேசியதாவது: திருவிழாக்கள், முகூர்த்த நாட்களில் அனைத்து பகுதிகளும் அடைக்கப்படுவதால் கோயில் அருகே குடியிருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லகூட முடியவில்லை. சன்னதி, மேலரத வீதி, கீழரத வீதி, பெரியரத வீதிகளில் குடியிருப்பவர்களின் டூவீலர்களையும் அனுமதிப்பதில்லை. வெளியூர் பக்தர்களுக்கு வசதி செய்கிறோம் என்ற பெயரில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசாரிடம் திட்டமிடல் இல்லை. அவனியாபுரம் ரோட்டில் குத்தகைக்கு கொடுத்துள்ள அரசு இடத்தை வாகனங்கள் நிறுத்த பயன்படுத்த வேண்டும்.திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கும் அதிகமான திருமண மண்டபங்கள் உள்ளது. முகூர்த்த நாட்களில் மணமக்கள் வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க போலீசார் மறுக்கின்றனர். இதனால் வெளியூரிலிருந்து வரும் மணமக்கள் வேதனை அடையும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கோயிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டை கொடுத்து அவர்கள் டூவீலரில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, மண்டல தலைவர் சுவிதா ஆகியோர், 'அனைத்து கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை