உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மேலுார், : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.விவசாயிகள் பேசியதாவது: வெள்ளலுார் மாயாண்டி கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கீழவளவு, சருகுவலையபட்டி, பூஞ்சுத்தியில் கண்மாய்க்கான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறை பராமரிக்காததால் தாலுகா முழுவதும் கண்மாய்கள் வறண்டுள்ளன. ஷட்டர்களை பராமரிக்காததால் தண்ணீர் வீணாகிறது.இந்நிலை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.ஏற்கனவே டிச.,19 முதல் 30 நாட்களுக்கு முழுமையாகவும், 60 நாட்களுக்கு முறை வைத்தும் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தொடர்ந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மேலும் ஒரு மாதத்திற்கு தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும்.தற்போது வரும் தண்ணீரை கண்மாய்களில் சேமிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். தவிர மாற்றுப்பயிர்கள் பயிரிடுவது குறித்து வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மானியத்தில் உளுந்து, எள் விதைகள் வழங்க வேண்டும் என்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் மணி, கிருஷ்ணன், பாண்டி, கதிரேசன், சிதம்பரம் சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ