உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடும்ப பாதுகாப்பு நிதி ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

குடும்ப பாதுகாப்பு நிதி ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

மதுரை: மதுரையில் இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில்ஓய்வூதியர் தினம், செயற்குழுக் கூட்டம் நடந்தது. தலைவர் ஞானேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோதண்டராமன் வரவேற்றார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் மோகன்ராம் உட்பட பலர் பேசினர்.எழுபது வயதை நிறைவு செய்தோருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தில் அனைத்து வியாதிகளுக்கும் காப்பீடு தொகை விவரங்களை தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர் இறந்தால் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.ஒரு லட்சம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் தாமோதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி