உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / களைக்கொல்லியை பூச்சி கொல்லி மருந்தாக பயன்படுத்திய விவசாயி

களைக்கொல்லியை பூச்சி கொல்லி மருந்தாக பயன்படுத்திய விவசாயி

ராமநாதபுரம், : களைக்கொல்லி மருந்துகளை, பூச்சிக்கொல்லி மருந்தாக தவறாக பயன்படுத்திய விவசாயி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள்குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளதாக சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிட்., விற்பனை மேலாளர் இம்மானுவேல் தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:களைக்கொல்லியாக பயன்படுத்தப்படும் மருந்தை, பூச்சிக்கொல்லி மருந்து என தவறாக பயன்படுத்திவிட்டு, இந்த மருந்தால் எனக்கு எந்த பலனும் இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.உண்மையில் களைக்கொல்லி மருந்தை தான் பூச்சிக்கொல்லி மருந்தாக நினைத்து விவசாயி பயன்படுத்தி விட்டு போலி என்று குறிப்பிட்டுள்ளார். களைக்கொல்லி மருந்துடன் அந்த மருந்தின்பயன்பாடு குறித்த துண்டு பிரசுரம் உள்ளது. இதை விவசாயிகள் கவனத்துடன் படித்து பார்த்து பயன்படுத்த வேண்டும் என்றார்.விவசாயி குறிப்பிட்ட DryUP Gold மற்றும் ZURA ஆகிய இரண்டு மருந்துகளும் களைக்கொல்லிகளாகும். இவை பூச்சிகளை கட்டுப்படுத்தாது. எனவே இவற்றை போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் எனக்கூறுவது தவறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ