உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர் வரத்து இன்றி விவசாயிகள் ஏமாற்றம்

நீர் வரத்து இன்றி விவசாயிகள் ஏமாற்றம்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில்மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.டி.கல்லுப்பட்டி, சேடபட்டி ஒன்றியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மானாவாரி பாசனமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் கிணற்று பாசனமும் நடக்கிறது. சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கண்மாய்கள் நிரம்பவில்லை. சில நாட்களாக பெய்து வரும் மழையை நம்பி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பணிகளை துவக்கி உள்ளனர்.முப்பதுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்களை நம்பியே நிலத்தடிநீர் ஆதாரம் உள்ளது. குளங்கள், கண்மாய்கள் வற்றிவிட்டால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படைந்து, கிணற்று பாசன விவசாயத்திலும் பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு பருவ மழை ஒரு வாரமாக தொடர்ந்து பெய்தாலும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லை. கண்மாய் காய்ந்தே கிடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி