மழையால் தவிக்கும் வாடிப்பட்டி விவசாயிகள்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இத்தாலுகாவில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுார் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கிறது. இன்னும் 2 வாரத்திற்குள் அனைத்து பகுதி களிலும் அறுவடை முடிந்து விடும். சில நாட்களாக தினமும் மழை பெய்வதால் நன்கு காய்ந்த நிலையில் இருந்த நெற் கதிர்கள் மழையில் நனைந்ததால் அறுவடைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே அறுவடைசெய்த நெல்லை, கொள்முதல் மையங்களில் குவித்து வைத்துள்ள விவசாயிகள் அவற்றை மழையில் இருந்து பாதுகாக்க சிரமப்படுகின்றனர்.குவித்து வைத்துள்ள நெல்லை தார்பாய்கள், பிளக்ஸ்கள் மூலம் மூடி பாதுகாக்கின்றனர். ஈரப்பதமான நெல்லை மழை இல்லாத நேரங்களில் உலர்த்தும் பணியில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.