உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

மதுரையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

மதுரை: மதுரையில்வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில், மாவட்ட அளவிலான கோரிக்கை விளக்க மாநாடு நடந்தது. கிராம நிர்வாக முன்னேற்ற அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் அன்பழகன் பேசுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் போன்ற திட்டங்களால் வேலைப் பளு அதிகரித்துள்ளது. பெறப்படும் 10 ஆயிரம் மனுக்களில் 8 ஆயிரம் மனுக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்டது. எந்த மனுக்களையும் நிராகரிக்க கூடாது என அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் மீது எவ்வாறு தீர்வு காண முடியும்'' என்றார். சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் ராம்குமார் நன்றி கூறினார். மாவட்ட இணைச் செயலாளர் மணிமேகலை ஒருங்கிணைத்தார். நிர்வாகிகள் தமிழரசன், கோபி, முகைதீன் அப்துல் காதர், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்க மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, மாவட்ட செயலாளர் ரகுபதி, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ், நில அளவு கணிக வரைவாளர் ஒன்றிப்பு மாவட்டத் தலைவர் தவமணி, செயலாளர் சசிக்குமார், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிராஜா, மாவட்டச் செயலாளர்கள் சந்திரபோஸ், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி