காளியம்மன் கோயிலில் உற்ஸவம்
சோழவந்தான் : சோழவந்தான் பசும்பொன் நகர் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பச்சை காளியம்மன் கோயிலில் உற்ஸவ விழா நடந்தது. தீர்த்த குடம், பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கு நடந்தன. பத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பசும்பொன் நகர் மக்கள், ஆன்மிக நண்பர்கள் செய்திருந்தனர்.