உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூன்றாவது நாளாக குப்பைக் கிடங்கில் தீ

மூன்றாவது நாளாக குப்பைக் கிடங்கில் தீ

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியில் சில மாதங்களாக தேங்கிய குப்பையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் 3 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.உசிலம்பட்டி நகராட்சிக்கென யு.வாடிப்பட்டி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பையை உரமாக்கும் பகுதி உள்ளது. சில ஆண்டுகளாக அங்கு கொட்டப்பட்ட குப்பையை முறையாக பிரித்து உரமாக மாற்றாமல் அவ்வப்போது தீயிட்டு எரித்து வந்தனர். அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் குப்பை சேகரிப்பு பகுதியில் கொட்டி வந்தனர். கடந்த மார்ச் 4 இரவு இந்த குப்பைக் கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அருகில் பெட்ரோல் பங்க், மின் தகனமேடை உள்ள பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வருவதும்,மீண்டும் புகைந்து எரிவதுமாக உள்ளது. நேற்று மண்அள்ளும் இயந்திரம் கொண்டு குப்பையை புரட்டி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ