உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி

சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி

மதுரை : இந்திய தொழில்முனை வோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டல் உணவு தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சத்து மாவு, சிறுதானிய இனிப்பு, கார உணவுகள், பாரம்பரிய உணவு, மசாலா பொருட்கள் தயாரித்தல், காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், ரெடிமிக்ஸ் உணவு சாதப்பொடி, குழம்பு வகைகள், தொக்கு, பிரியாணி பவுடர், புட்டு மிக்ஸ், அடை மிக்ஸ், மில்லெட் அவல், ஜாம், ஜெல்லி, வடகம், மால்ட் வகை உணவுகள் தயாரிக்க செய்முறை பயிற்சி அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் குடிசைத் தொழில் சான்றிதழ், எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ் இலவசமாக பெற்றுத் தரப்படும். 26 நாட்கள் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை பயிற்சி நடைபெறும். குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் ஆதார் அட்டை நகல், டி.சி., நகல், போட்டோவுடன் அணுகலாம். செய்முறைக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். அலைபேசி: 90950 54177.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை