உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முல்லை நகர் மக்களுக்கு த.வெ.க., ஆதரவு போனில் பேசினார் பொதுச்செயலாளர் ஆனந்த்

முல்லை நகர் மக்களுக்கு த.வெ.க., ஆதரவு போனில் பேசினார் பொதுச்செயலாளர் ஆனந்த்

மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை காலி செய்யுமாறு கூறி நீர்வளத்துறை நோட்டீஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மதுரை பிபீகுளம் முல்லை நகர் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.மதுரை பிபீகுளம் முல்லை நகர், நேதாஜிமெயின் ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது.சட்டசபை தேர்தலின்போது முல்லைநகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதாக தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நீர்நிலை பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியாக வகைமாற்றம் செய்து பட்டா வழங்கக்கோரி முல்லை நகர் பகுதி மக்கள் 8 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.நடிகர் விஜய்யும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது சார்பில் த.வெ.க., மதுரை வடக்கு மாவட்ட தலைவர் கல்லாணை தலைமையிலான கட்சியினர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். முல்லை நகர் பகுதி மக்களிடம் பொதுச்செயலாளர் ஆனந்த் அலைபேசியில் பேசினார்.இதைதொடர்ந்து போராட்ட குழுவினரிடம் மனுக்களை பெற்ற நிர்வாகிகள், அதை விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.மாவட்ட தலைவர் கல்லாணை கூறுகையில், ''தலைவர் விஜய் சொன்னது போல மக்கள் பிரச்னைக்காக நாங்கள் என்றும் ஆதரவாக அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை