உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை தமுக்கத்தில் கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ

நாளை தமுக்கத்தில் கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் பிப். 8, 9ல் பி.என்.ஐ., பிரம்மாஸ் சார்பில் அனுஜ் டைல்ஸ் வழங்கும் 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ 2025'கண்காட்சி நடக்கிறது.வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தங்கள் வணிக முயற்சிகளை மதுரையிலும், தென் தமிழகம் முழுவதும் தொடங்குவதற்கான தளத்தை உருவாக்கும் விதமாக 55க்கும் மேற்பட்ட பிரான்சைஸர்களை ஒன்றிணைத்து தமுக்கத்தில் 'கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ' நடத்தப்படுகிறது.ஆர்வமுள்ள தொழில்முனைவோரை நிரூபிக்கப்பட்ட உரிமையாளர்களுடன் இணைப்பது, வெற்றிகரமான வணிக தொடக்கங்களை தொடங்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, இணைப்புகளை வளர்ப்பதன் மூலம் பரஸ்பர வளர்ச்சியை ஊக்கப்படுத்தி சமூகத்தில் பொருளாதார வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறப்பது இக்கண்காட்சியின் நோக்கமாகும்.பிரான்சைஸி எடுப்பவர்களுக்கும் வழங்குபவர்களுக்கும் பாலமாக இக்கண்காட்சி அமையும். விருப்பமுள்ளவர்கள் கண்காட்சியை காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை பார்வையிடலாம். நபர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம். 78718 00666 என்ற எண்ணிலோ www.grandfranchiseexpo.comஎன்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை