உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொடர் மழையால் முளைப்பு விடும் அறுவடை செய்த நெல் மணிகள்

தொடர் மழையால் முளைப்பு விடும் அறுவடை செய்த நெல் மணிகள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் பாசனம் காரணமாக நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்துள்ளதால், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேப்பனுாத்து, கள்ளபட்டி பகுதி கிராமங்களில் பரவலாக கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதால் அருகே உள்ள பாறைப்பட்டியில் நெல் கொள்முதல் மையம் துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கொள்முதல் மையம் திறக்கும் பணி நடந்து வருகிறது. இதனை நம்பி சில நாட்களாக அறுவடை செய்த நெல்லை கொள்முதல் மையம் திறக்கும் பகுதியிலும், வயலுக்கு அருகிலும் குவித்து வைத்தனர். ஆனால், தொடர்ந்து மழையால் கள்ளப்பட்டியில் நெல்குவியலின் தரைப்பாகத்தில் உள்ள நெல்மணிகள் நனைந்து முளைப்பு எடுத்து வருகிறது. மேலும், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களும் சாய்ந்து வருகின்றன.விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதோடு, மழை, காற்றால் வயலில் சாய்ந்து பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !