உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள ராயகோபுர பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில், அதிகாரிகள் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஆலயம் காப்போம் பவுண்டேஷன் தலைவர் ரமணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மீனாட்சி அம்மன் கோயில் எதிரே ராய கோபுரம் உள்ளது. முற்றுப்பெறாத இக்கோபுரம் சிற்பக் கலைக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. சிற்பங்களை மறைத்து சிலர் கடைகள் நடத்துகின்றனர். கோபுரத்தை சுற்றிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள், அங்கீகாரமற்ற கட்டுமானங்களை அகற்ற வேண்டும்.புதுமண்டபம் அமைந்துள்ள அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும். கோபுரத்தை பாதுகாக்க வேண்டும் என அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 3 மாதங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை