உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அன்பழகன் என்பவர் தாக்கல் செய்த மனு: வாடிப்பட்டி அருகே சரந்தாங்கியில் பெரிய ஓடை உள்ளது. அதில் நீர்வழிப்பாதையை தடுக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றிவிட்டு, ஓடையை மீட்கக்கோரி கலெக்டர், வாடிப்பட்டி தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: நீர்நிலை சாலையாக மாற்றப்பட்டுள்ளதில் அதிருப்தியடைகிறோம்.ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர அக்.14வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. மீட்கப்பட்டதற்கான போட்டோ ஆதாரங்களை அக்.15 ல் அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ