மருது சகோதரர்களுக்கு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை முத்துப்பாண்டி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மருது சகோதரர்கள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆட்சிபுரிந்த மன்னர்கள். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குளத்தில் பிறந்தனர். சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக ஆட்சி புரிந்தனர். சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிரிட்டீஷ் ஆட்சியில் துாக்கிலிடப்பட்டனர். அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் நரிக்குடி முக்குளத்தில் சிலை, மியூசியம், நுாலகம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை வருவாய்த்துறை செயலர், விருதுநகர் கலெக்டர், திருச்சுழி தாசில்தார் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.