உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கேபிள்களை தோண்டிப்போடும் நெடுஞ்சாலைத்துறை

 கேபிள்களை தோண்டிப்போடும் நெடுஞ்சாலைத்துறை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி -- வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரோட்டோரத்தில் பள்ளம் தோண்டும் போது நகராட்சி, குடிநீர் வடிகால்வாரியம், பொதுப்பணித்துறை, தொலைத்தொடர்புத்துறை ஆகியோரது ஒருங்கிணைப்பு இல்லாமல் தோண்டப்படுவதால் ஆங்காங்கே டெலிபோன் கேபிள்கள், குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். நேற்று வத்தலக்குண்டு ரோட்டில் கண்மாய்கரையோரம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. வத்தலக்குண்டு ரோட்டிலும் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்தனர். மேலும் கண்மாயில் நீர்நிரம்பினால் அதிகமாக கசிவு ஏற்படும் பகுதியாக உள்ள கரையில் தடுப்புச் சுவரையும் அப்புறப்படுத்தியுள்ளனர். விரிவாக்கப்பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது சம்பந்தப்பட்ட துறையினரின் நேரடி கண்காணிப்பில் பணிகள் நடந்தால் குடிநீர் குழாய், டெலிபோன் கேபிள்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தாமல் தோண்டும் பணி நடத்த ஏதுவாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ