உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதநீர் விற்பனை ஜோர்

பதநீர் விற்பனை ஜோர்

பேரையூர்: பேரையூர், மேலப்பட்டி, சாப்டூரில் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன. வியாபாரிகள் நேரில் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் பதநீர் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.வியாபாரிகள் கூறியதாவது: பனை ஓலையில் பருகினால் ரூ.30. ஒரு லிட்டர் பாட்டில் ரூ.60க்கு கொடுக்கிறோம். மாசி மாதம் சீசன் துவங்கும். பங்குனி, சித்திரையில் வியாபாரம் நன்றாக இருக்கும் என்றனர்.விவசாயிகள் கூறியதாவது: பதநீர் சீசன் ஆரம்பித்துள்ளதால் எங்களுக்கு தினமும் வருமானம் வருகிறது.3 மாதங்களுக்கு வருமானம் வரும் என எதிர்பார்க்கிறோம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பதநீர் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி