உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மின்வாரிய மனுவுக்கு உடனடியான தீர்வு

 மின்வாரிய மனுவுக்கு உடனடியான தீர்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மின்வாரியம் தொடர்பாக பெறப்பட்ட 1299 மனுக்களில் 1241க்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. இத்திட்டத்தில் மாவட்டத்தில் நடந்த முகாம்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் மின்இணைப்பு எண் பெயர் மாற்றம் செய்ய 1135 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1098 மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது. புதிய மின்இணைப்பு பெறுவதற்கு 112 மனுக்கள் பெறப்பட்டு 9 மனுக்களுக்கும், வீதப்பட்டி மாற்றத்திற்கு 32 மனுக்கள் பெறப்பட்டு 25 மனுக்களுக்கும், மின்பளுமாற்றத்திற்கு பெறப்பட்ட 20 மனுக்களுக்கும் அன்றே தீர்வு காணப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களை 24 மணி நேரமும் பெற மின்னகம் சேவை மையம் (94987 94987) உள்ளது. இந்தாண்டு நவ.6 வரை 14 ஆயிரத்து 650 அழைப்புகள் பெறப்பட்டு, 14 ஆயிரத்து 635 அழைப்புகளுக்கு அன்றே தீர்வு காணப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ