| ADDED : ஜன 25, 2024 05:31 AM
மதுரை: கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் உரிமை கொடுத்தது ஹிந்து மதம் என இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.அயோத்தியில் ராமர் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டதின் சிறப்பு நிகழ்ச்சியாக மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்ரீ ராம மகிமை எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.அவர் பேசியது:பெரியாழ்வார் பல்லாண்டு- பாடிய தலம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அயோத்தியில் ஸ்ரீ ராம சிலை பிரதிஷ்ட்டை நிகழ்வு உலகம் முழுவதும் சாதி பேதமின்றி 750 கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மொழிதான் உண்டு. ஆனால் நம் பாரத நாட்டில் பல்வேறு மொழிகள் கலாசாரங்கள் நிறைந்தது. கோரோனோ என்ற நோயிலிருந்து 145 கோடி மக்களையும் பாதுகாத்து உலக மக்களுக்கு உதவி செய்ய வைத்தது இந்தியாவின் ஆன்ம பலம் தான்.கடவுள் இல்லை என்று பேசுவதற்கும் உரிமை கொடுத்த மதம் சனாதன தர்மமான ஹிந்து மதமே. உடல் முழுதும் குருதி ஓடினாலும் எடுப்பதற்கும் ஒரு இடம் நரம்பு என நிர்ணயிப்பது போல உலகம் முழுவதும் பரவி இருக்கும் அருள் சக்தியை இறைவனைத் தேட நிர்ணயிக்கப்பட்ட இடம் தான் கோவில்கள்.'கலி'என்ற இரண்டு எழுத்தை சமாளிக்க ராம என்ற இரண்டெழுத்தை பிடித்து கொள்ள வேண்டும். ராம நாமாவை பக்தியுடன் கூறினால் எளிதாக இறைவனிடம் ஒட்ட முடியும். பெரியவா கூட அனைவரையும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதக் கூறுவது உண்டு. சிவா பெருமானே பார்வதிக்கு உயர்ந்த நாமமாக கூறியது ராமநாமம். இவ்வாறு பேசினார்.ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர். டி. ராமசுப்பிரமணியன், செயலாளர் எல். வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் பரத்வாஜ், ஸ்ரீதர் ராமகிருஷ்ணன், ஸ்ரீ குமார், ஸ்ரீராமன், சங்கரன் செய்திருந்தனர்.