ல்கலை டென்னிஸ் போட்டி
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரியில் நடந்தது. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி, வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி அணிகள் மோதின. இதில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் ஒற்றையர் பிரிவில் சாலமன் ரொனால்டோ (6 - 2), ஹரி ராஜன் (6 - 0) செட்களில் ராகேஷ், சுதர்சனை வீழ்த்தினர். இரட்டையர் பிரிவில் சாலமன் ரொனால்டோ, விஷ்ணுராஜ் ஜோடி 6 - 2 செட்களில் ராகேஷ், சுதர்சன் ஜோடியை வீழ்த்தினர். 3 --- 0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லுாரி அணி தொடர்ந்து 6வது முறையாக வெற்றிக்கோப்பையை தக்க வைத்துக்கொண்டது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், விளையாட்டுத்துறைத்தலைவர் பாலகிருஷ்ணன், இயக்குநர் நிர்மல்சிங் பாராட்டினர்.