உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதிகள் விரல் ரேகை பதிவு மதுரை சிறையில் அறிமுகம்

கைதிகள் விரல் ரேகை பதிவு மதுரை சிறையில் அறிமுகம்

மதுரை:மதுரை மத்திய சிறையில் கைதிகள் மோதலை தடுக்கும் வகையில், 14 'செல்'களில் கைதிகளின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட உள்ளது. இதனால், ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லிற்கு கைதிகள் செல்வது, சதித்திட்டம் தீட்டுவது தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மத்திய சிறையில், 1,700க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளனர். இதில், தண்டனை கைதிகள் காலை, 7:30 மணிக்கு செல்லில் இருந்து வெளியே வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை செய்து மாலை, 4:30 மணிக்கு மீண்டும் உள்ளே சென்றுவிடுவர். விசாரணை கைதிகள் காலை, மதியம், மாலையில் தலா, 2 மணி நேரம் 'ரிமாண்ட் செல்'லில் இருந்து வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்று விடுவர். சிறையில் மொத்தம், 14 செல்கள் உள்ளன. ஒரு செல்லில் உள்ள கைதி, மற்றொரு கைதியை சந்திக்க வேறு ஒரு செல்லுக்கு செல்வதால் சதித்திட்டம் தீட்டவும், கலகம் செய்யவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க கைதிகள் அனைவரது விரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட உள்ளன.சோதனை முயற்சியாக, தற்போது எட்டாம் நம்பர் செல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து செல்களிலும் விரல் ரேகை பதிவு இயந்திரம் பொருத்தப்பட உள்ளது. இதனால், 'ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு கைதிகள் செல்வதும், சதித்திட்டம் தீட்டுவதும் தடுக்கப்படும்' என்கின்றனர், அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை