உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜெ., பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜெ., பிறந்தநாள் கொண்டாட்டம்

மதுரை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, மதுரையில் அவரது உருவ கேக் சிலை அமைக்கப்பட்டது. 'கலாம் உலக சாதனை'யில் இடம் பிடிக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், ஜெயலலிதாவின் 6.5 அடி உயரத்தில், 300 கிலோ எடையுடன் தயாரான சிலையை, அவரது சரவணா மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தார். திராளான பொதுமக்கள் ஜெ.,வின் கேக் சிலையை கண்டு வியந்தனர்.அ.தி.மு.க., நிர்வாகிகள் அண்ணாத்துரை, குமார், வில்லாபுரம் ரமேஷ், பரவை ராஜா, திரவியம் உட்பட கட்சியினர் பலர் ஜெயலலிதாவின் கேக் சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். ஏழை எளியோருக்கு டாக்டர் சரவணன் அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்