உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு மைதானம் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

ஜல்லிக்கட்டு மைதானம் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

மதுரை: அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.ஜன.,24 ல் இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். காளைகள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள், வி.ஐ.பி.,க்கள் வரும் வழி, அவசரகால வழிகளை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமாறன், செயற்பொறியாளர் செந்துார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ