ஜீப் மோதி பலி
திருமங்கலம்; கப்பலுார் கண்ணன் 34. இட்லி கடை வைத்திருந்தார். நேற்று மதியம் கப்பலுார் ரிங் ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது திருமங்கலத்தில் இருந்து மதுரை சென்ற ஜீப் மோதி இறந்தார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.