கராத்தே: மேலுார் மாணவர்கள் சாதனை
மேலுார் : சென்னையில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் மேலுார் எஸ்.கே., மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் சுதாகரன் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.முதல் பரிசு வென்ற மாணவர்கள்: விதர்வன், ஹரிஸ்வரன், ஆனந்தன், லோகேஸ்வரன், தருண். இரண்டாம் பரிசு மாணவர்கள்: தனுஜன், அகிலன், ஜஸ்வந்த், விக்னேஸ்வரன், புகழ், உத்திஷ்டன். மூன்றாம் பரிசு மாணவர்கள்: பவதாரிணி.