உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தண்ணீரின்றி தரிசாகும் நிலங்கள்

 தண்ணீரின்றி தரிசாகும் நிலங்கள்

கொட்டாம்பட்டி: லெக்கடிபட்டி இரட்டை கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயை நீர்வளத் துறையினர் பராமரிக்காததால் தண்ணீரின்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இக் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான இரட்டை கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு திண்டுக்கல் கரந்த மலையிலிருந்து வரும் பாலாற்று தண்ணீர் மூலம் கண்மாய் நிரம்பும். அதன் மூலம் சுற்றியுள்ள 7 கிராமங்களின் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். கண்மாய்க்கு வரும் நீர்வழிப் பாதையை பராமரிக்காததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. விவசாயி பொன்னன் கூறியதாவது: நீர்வழிப் பாதையில் மணல், குப்பையைக் கொட்டி அழித்து விட்டனர். அதனால் கண்மாய்க்கு தண்ணீர் வராததால், விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கால்வாய் அழிப்பால் தண்ணீர் வேறு பகுதிகளுக்கு சென்று வீணாகிறது. நீர்வளத் துறையினர் கால்வாயை துார்வாரி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றார். நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் ஜெயராமன் கூறுகையில், ''அதிகாரிகளை நேரில் ஆய்வு செய்ய அனுப்பி உள்ளேன். ஏற்கனவே கால்வாய் பராமரிப்பு குறித்து திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை