உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிபதி முன்னிலையில் ஜல்லிக்கட்டு கலெக்டரிடம் வழக்கறிஞர்கள் மனு

நீதிபதி முன்னிலையில் ஜல்லிக்கட்டு கலெக்டரிடம் வழக்கறிஞர்கள் மனு

மதுரை: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் நடத்த வலியுறுத்தி மதுரை கலெக்டரிடம் வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்குமார், சிவமுருகன் ஆகியோர் அளித்த மனு: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் சில ஆண்டுகளாக அங்கு ஊழல்கள், முறைகேடுகள் அதிகரித்துள்ளது. இதில் மோசடி, முறைகேடுகளால் உச்சநீதிமன்ற உத்தரவு முழுமையாக மீறப்படுகிறது. இதனால் கடந்தாண்டு உயிர்ப்பலி ஏற்பட்டது. இரண்டாண்டுகளுக்கு முன் வெற்றிபெற்றோருக்கு பரிசு வழங்குவதில் முறைகேடு நடந்தது. கடந்தாண்டு மோசடியாக பரிசு பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டுக்கு வருவாய், போலீஸ் துறையினர் பலநுாறு பேர் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் செலவிடப்படுகிறது. ஆனால் விழா கமிட்டியினர் பல லட்சம் ரூபாய் தங்ககாசு உட்பட பரிசுகளுக்காக வசூல் செய்கிறார்கள். இதுகுறித்து கணக்கு கேட்க முடிவதில்லை. எனவே உயர்நீதி மன்ற நீதிபதி மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை